அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் 6 பேருக்கு வாந்தி மயக்கம்.

அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் 6 பேருக்கு வாந்தி மயக்கம்.

சிவகங்கை மாவட்டம் , திருப்பத்தூர் அருகேயுள்ள எஸ் எஸ் கோட்டையில் உள்ள சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 5-ஆம் வகுப்பு மாணவர்கள் புகழினி (10), சஞ்சனா (10), சுஜீத் (10), அதிா்ஷ்ட லட்சுமி (10), 3-ஆம் வகுப்பு மாணவி சர்மிதா (8), ஒன்றாம் வகுப்பு மாணவர் சர்வின் (6), ஆகிய 6 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது.

இதையடுத்து, இந்த மாணவ, மாணவிகளை திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து தகவலறிந்த எஸ்.எஸ்.கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் சேகரன், வேல்முருகன் ஆகியோர் அரசு மருத்துவமனைக்குச் சென்று மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். தகவல் அறிந்த சிங்கம்புணரி வட்டாட்சியர் பத்மாவதி பள்ளி சத்துணவுக் கூடத்தை ஆய்வு செய்தார்.

இந்தப் பள்ளியில் பணிபுரியும் சத்துணவு அமைப்பாளர் முத்துலெட்சுமி 7 பள்ளிகளில் சத்துணவு அமைப்பாளராக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்