சிவகங்கை உடையார் சேர்வை ஊரணி சுத்தம் செய்யும் பணி. மற்றும் மரக்கன்றுகள் நடுதல். சிவகங்கை நகர்மன்ற தலைவர் ஆய்வு.
சிவகங்கை உடையார் சேர்வை ஊரணி சுத்தம் செய்யும் பணி. மற்றும் மரக்கன்றுகள் நடுதல். சிவகங்கை நகர்மன்ற தலைவர் ஆய்வு.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் கோரிக்கை ஏற்று, சிவகங்கை திருப்பத்தூர் ரோட்டில் உள்ள உடையார் சேர்வை ஊரணியை அந்த வார்டு நகர்மன்ற உறுப்பினரின் கோரிக்கையை ஏற்று மற்றும் பொதுமக்களின் வேண்டுகோளுக்கினங்க,
சிவகங்கை நகர் மன்ற தலைவர் சி. எம். துரை ஆனந்த் அவர்கள் JCB இயந்திரத்தை கொண்டு அங்குள்ள மரம், செடி ,கொடி அனைத்தையும் அகற்றி 10 ஆண்டுகளாக சுத்தம் செய்யாமல் இருந்த வரத்து கால்வாய் சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டு ஆய்வு செய்தார்.

இந்த பணி ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது. மேலும் ஊரணியை சீர் செய்வதுடன் மரக்கன்றுகளையும் வைத்தனர்.. இந்த பணியுல் நகராட்சி மேலாளர் கென்னடி , மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள். ஜெயகாந்தன், ராமதாஸ், வட்டப் பிரதிநிதி சேது ஆகியோர் உடன் இருந்தனர்.