தடைபட்டு வந்த குடிநீரை, சீரிய முறையில் கொடுத்த சிவகங்கை நகராட்சி சேர்மன். பொதுமக்கள் பாராட்டு.
தடைபட்டு வந்த குடிநீரை, சீரிய முறையில் கொடுத்த சிவகங்கை நகராட்சி சேர்மன். பொதுமக்கள் பாராட்டு.

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட இந்திரா நகர்26 மற்றும் 27வது வார்டு பகுதியில்
வெகு நாட்களாக காவிரி குடிநீர் வினியோகம் பைப்லைன் உடைந்ததால் குடிநீர் தடைபட்டு தடைபட்டு கிடைத்து வந்தது.
அதனை சரி செய்யும் வகையில் பொதுமக்கள் நலன் கருதி இடைக்காட்டூர் குடிநீர் குழாய் மூலமாக மதுரை ரோடு வாட்டர் டேங்கிற்கு சென்று அங்கிருந்து இந்திரா நகருக்கு குழாய் மூலமாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்ததை மாற்றி நேரடியாக இந்திராநகர் பொதுமக்கள் சிரமமின்றி பயன் பெரும் வகையில் நகர்மன்ற தலைவர் மற்றும் 27வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் அண்ணன் சிஎம்.துரைஆனந்த் அவர்களின் சீரிய முயற்சியால் இடைக்காட்டூர் குடிநீர் குழாயில் இருந்து நேரடியாக இந்திரா நகர் டேங்கிற்கு குழாய் அமைத்து இந்திரா நகரில் இருந்து நேரடியாக குடிநீர் விநியோகம் செய்யபடஉள்ளது.
நகராட்சி தலைவர் துரை ஆனந்தின் இந்த சீரிய செயலை வார்டு பொதுமக்கள் அனைவரும் பாரட்டினர்.