பிரபல குளிர்பான நிறுவனங்களின் பாட்டில்களில் தங்களுடைய நிறுவனத்தின் பெயர் அடங்கிய லேபிளை ஒட்டி விற்பனை செய்த ஏழு குளிர்பான நிறுவனங்கள் மூடல்.

பிரபல குளிர்பான நிறுவனங்களின் பாட்டில்களில் தங்களுடைய நிறுவனத்தின் பெயர் அடங்கிய லேபிளை ஒட்டி விற்பனை செய்த ஏழு குளிர்பான நிறுவனங்கள் மூடல்.

திருச்சியில் செயல்படும் சில குளிர்பான நிறுவனங்கள், பிரபல குளிர்பான நிறுவனங்களின் பாட்டில்களில் தங்களுடைய நிறுவனத்தின் பெயர் அடங்கிய லேபுலை ஒட்டி அதனை விற்பனை செய்வது உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தெரிய வந்தது. அதனை தொடர்ந்து அவர்கள் திருச்சி மாவட்டத்தில் உள்ள குளிர்பான நிறுவனங்களில் சோதனை செய்தனர்.

அவ்வாறு நடத்தப்பட்ட சோதனையில் திருச்சியில் வெவ்வேறு இடங்களில் செயல்படும் ஏழு வெவ்வேறு குளிர்பான நிறுவனங்களில் பிரபல குளிர்பான நிறுவனங்களின் பாட்டில்களில் தங்களுடைய நிறுவனத்தின் பெயரை அடங்கிய லேபிலை ஒட்டி அவற்றை விற்பனை செய்வது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அந்த ஏழு நிறுவனங்களில் இருந்து ரூ.1,11,592 மதிப்புள்ள 12,370 குளிர்பானங்கள் நிரப்பிய பாட்டில்களையும், 3298 காலி பாட்டில்களையும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அங்கு பயன்படுத்தப்பட்ட குளிர்பான மாதிரிகள் எடுக்கப்பட்டு அவை உணவு பாதுகாப்பு கூடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த ஏழு நிறுவனங்களிலும் செயல்படக்கூடாது என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்