வட மாநில இளைஞர் ரெயிலில்த வறவிட்ட உடமைகளை மீட்டு ஒப்படைத்த ரயில்வே துறையினர்.
வட மாநில இளைஞர் ரெயிலில்த வறவிட்ட உடமைகளை மீட்டு ஒப்படைத்த ரயில்வே துறையினர்.

வடமாநில இளைஞர் ரயிலில் தவறவிட்ட உடமைகளை ரயில்வே துறையினர் துரிதமாக மீட்டு அவரிடம் ஒப்படைத்த சம்பவம் வைரலாகி வருகிறது.
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இருந்து, திருச்சி, சென்னை வழியாக செல்லும் ஹெளரா விரைவு ரயில் புதன்கிழமை இரவு அங்கிருந்து புறப்பட்டு சென்னை சென்றுகொண்டிருந்தது. அதில், வடமாநிலத்தைச் சேர்ந்த கேரளத்தில் பணியாற்றும் சந்தோஷ்பவ்மிக் என்ற இளைஞர் பயணித்தார். ரயில் திருச்சியை கடந்த சென்ற பின்னர் அவரது பெட்டியொன்றை காணவில்லை. இது குறித்து அவர் டிக்கெட் பரிசோதகர் புகழேந்தியிடம் தகவல் தெரிவித்தார். மேலும் இந்த தகவல் ரயிலில் பயணித்த ரயில்வே போலீஸாருக்கும் தெரிவிக்கப்பட்டு அவர்கள் மூலமாக திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்துக்கும் தகவல் சென்றது.
இதற்கிடையே ரயிலில் நடந்த விசாரணையில், அதே ரயில் பெட்டியில் சந்தோஷ்க்கு சற்று அருகில் அமர்ந்து பயணித்த திருச்சியைச் சேர்ந்த பெண் உடைமைகளுடன் திருச்சியில் இறங்கியுள்ளனர். அவர்கள் இறங்கும்போது கவனக்குறைவாக வடமாநில இளைஞரின் பெட்டியை எடுத்துச்சென்று விட்டது தெரியவந்தது. அவரது பெட்டி அதே இடத்தில் இருந்தது. இதையடுத்து டிக்கெட் பரிசோதகர் புகழேந்தி அவரிடமிருந்த குறிப்பிட்ட அந்த பெண் பயணியின் தொடர்பு எண்ணை தொடர்பு கொண்டு விவரம் தெரிவித்துள்ளார். அந்த பெண்ணும் உடைமையை மாற்றி எடுத்துச் சென்றதையறிந்து திருச்சி ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸாரிடம் கொண்டு வந்து ஒப்படைத்தார்.
பின்னர் திருச்சியிலிருந்து சென்னை சென்ற மலைக்கோட்டை விரைவு ரயிலில் அந்த உடைமையை ரயில்வே போலீஸார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் உதவியுடன் மற்றுமொரு (பொறுப்பு) டிக்கெட் பரிசோதகர் சண்முகானந்தன் எடுத்துச் சென்றார். சென்னையில் வியாழக்கிழமை அதிகாலை உரிமையாளரிடம் பெட்டியை ஒப்படைக்கப்பட்டது. அதேபோல அந்த பெண்ணின் உடமையையும் திருச்சி செல்லும் ரயில் மூலம் எடுத்து வரப்பட்டுள்ளது. தவறிய உடைமையை குறிப்பாக சான்றிதழ்கள் மற்றும் ரொக்கம் உள்ளிட்டவைகளை துரிதமாக செயல்பட்டு பெற்றுத்தந்த ரயில்வே துறையினர் மற்றும் காவல்துறை, பாதுகாப்பு படையினருக்கு சந்தோஷ் நன்றி தெரிவித்தார்.