திருச்சி பொன்மலைபட்டியில் ரயில்வே ஊழியர் தூக்கு போட்டு சாவு. உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை.

 

திருச்சி பொன்மலைபட்டியில் ரயில்வே ஊழியர் தூக்கு போட்டு சாவு. உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை.

கேரளாவை சேர்ந்தவர் அனுகிருஷ்ணன். இவர் திருச்சியில் ரயில்வே ஊழியராக பணிபுரிந்து வந்தார்.திருமணம் ஆகிஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. இவரது மனைவி, குழந்தை கேரளாவில் வசித்து வருகின்றனர். இவர் தனது நண்பர்களுடன் திருச்சி பொன்மலைப்பட்டி பாரதிதாசன் தெருவில் ஒரு வீட்டில் வசித்து வந்தார். நேற்று இரவு மனைவியிடம் போனில் பேசி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதில் விரக்திஅடைந்த அனுகிருஷ்ணன் தான் தங்கியிருந்த வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் பொன்மலை போலீசார் வரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்