பொன்முடிக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டணை .மேல்பாதி திரெளபதி அம்மன் தான் காரணமா?

 

பொன்முடிக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டணை .மேல்பாதி திரெளபதி அம்மன் தான் காரணமா?

2006-11 ஆம் ஆண்டு திமுக ஆட்சியின் போது உயர்கல்வி மற்றும் கனிம வள அமைச்சராக பொன்முடி இருந்தார். பொன்முடி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அதிமுக ஆட்சியில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவரது மனைவி விசாலாட்சி உள்ளிட்ட குடும்பத்தினர் மீதும் 2011ல் செப்டம்பரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் 2006 ஏப்ரல் 13 முதல் 2010 மே 13 வரையிலான காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 1.75 கோடி அளவுக்கு சொத்துகள் சேர்த்ததாக கூறப்பட்டது. இது வருமானத்தை விட 65.99 சதவிகிதம் அதிகம் ஆகும்.

இதையடுத்து லஞ்ச ஒழிப்பு துறை தனது இறுதி அறிக்கையை தாக்கல் செய்தது.

இதில் 2006 ஏப்ரல் 13 முதல் 2011 மே 14 வரையிலான காலமாக மாற்றப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் 2016 ஏப்ரலில் விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு துறை கடந்த 2017ல் மேல் முறையீடு செய்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விசாரித்தார். இந்த மேல்முறையீடு வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் டிசம்பர் 19ஆம் தேதி தீர்ப்பளித்தார். அதில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சியை விடுதலை செய்து விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும் இன்று நேரிலோ, அல்லது வீடியோ கான்பரன்ஸ் முறையிலோ ஆஜராகலாம் என்று உத்தரவிட்டார்.

இந்நிலையில் இன்று பொன்முடி மற்றும் அவர் மனைவி விசாலாட்சி தேசியக்கொடி அகற்றப்பட்ட காரில் 10:00 மணிக்கு நீதிமன்றத்திற்கு வந்தார்கள். நீதிமன்ற அறை 46 ல் கைகளை பிசைந்தபடி பதட்டத்துடனே இருந்துள்ளார். சரியாக 10:30 மணிக்கு தீர்ப்பை வாசித்த நீதிபதி ஜெயச்சந்திரன் பொன்முடி மற்றும் அவர் மனைவி விசாலாட்சி குற்றவாளி என்று மூன்றாண்டுகள் சிறை தண்டணையும், 50 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் மேல் முறையீடு செய்வதற்காக 30 நாட்களுக்கு தண்டனையை நிறுத்தி வைத்துள்ளார்.

இந்த நிலையில் பொன்முடி அவர்களே, நீங்கள் மேல்பாதி திரௌபதிக்கு போட்ட பூட்டு

ஆறே மாதத்தில் உங்களை உள்ளே தள்ள வைத்தது. இந்த கர்மா!!

திரௌபதியை வைத்து அரசியல் செய்தவர்கள் அழிந்தது தான் வரலாறு என்று சிலர் x தளத்தில் பதிவிட்டும் வருகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்