திருச்சியில் காரும், வேனும் மோதிக்கொண்ட விபத்தில், காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பலி
திருச்சியில் காரும், வேனும் மோதிக்கொண்ட விபத்தில், காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பலி.
திருச்சி மாநகர கோட்டை காவல்நிலைய போக்குவரத்து பிரிவு காவல் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த திருக்குமார் நேற்று இரவு நவல்பட்டு அருகே காரில் வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த வேன் மோதியதில் படுகாயம் அடைந்த திருக்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது உடலை நவல்பட்டு போலிசார் மீட்டு உடற்கூறு ஆய்வு செய்யவதற்காக திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
செல்போன் பறிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து பிடித்ததற்காக திருக்குமாருக்கு திருச்சி காவல் ஆணையர் காமினி அவர்கள் பாராட்டு சான்றிதழ் வழங்கியது குறிப்பிடதக்கது.