திருச்சி உறையூரில் தடையை மீறி பா.ம.கவினர் ஆர்ப்பாட்டம்.
திருச்சி உறையூரில் தடையை மீறி பா.ம.கவினர் ஆர்ப்பாட்டம்.
பாட்டாளி மக்கள் கட்சி திருச்சி மத்திய மாவட்டத்தின் சார்பாக உறையூர் கொறதெருவில் காவல்துறை தடையை மீறி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்தினை கண்டித்தும், டாக்டர் ராமதாஸிடம் மன்னிப்பு கேட்க வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மத்திய மாவட்ட செயலாளர் உமாநாத் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் கதிர் ராஜா, மாநில செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ஜான் ரஸ்கின், மாவட்ட பொருளாளர் சுதா, ஸ்ரீரங்கம் தொகுதி மகளிர் அணி துணை செயலாளர் ரேவதி,தொகுதி செயலாளர் நியூ மேன் மற்றும் நிர்வாகிகள் சிவபிரகாசம், ராஜு, கார்த்தி , பகுதி செயலாளர் செந்தில்குமார், பாஸ்கர், தினேஷ் குமார்,சக்திவேல் மாவட்ட பசுமைத்தாயக செயலாளர் ஸ்ரீதர் கொள்கை விளக்க அணி செயலாளர் ஸ்ரீகாந்த், விவசாய அணி செயலாளர் ராம்ஜி நகர் பாலு, இளைஞரணி தலைவர், பி கே சுப்பிரமணி, சுரேஷ் , மாலிக்,கங்காதரன் ம அசோக் , பாஸ்கர் வன்னியர், ஐயப்பன் ,தினேஷ், ஹரி, சூரி, வேல்முருகன் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் முதல்வருக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர். உடனே பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டு இருந்த போலீசார் அவர்கள் அனைவரையும் கைது செய்து அருகாமையில் உள்ள மண்டபத்துக்கு கொண்டு சென்றனர்.
இந்த போராட்டம் காரணமாக சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.