படித்த மாணவர்கள் சேர்ந்து பணி ஒய்வு பெறும் உடற்கல்வி ஆசிரியருக்கு பாராட்டு விழா.

படித்த மாணவர்கள் சேர்ந்து பணி ஒய்வு பெறும் உடற்கல்வி ஆசிரியருக்கு பாராட்டு விழா.

பொன்மலை ரயில்வே உயர்நிலைப்பள்ளியில் (ஆங்கில வழி) உடற்கல்வி ஆசிரியர் (PET) ஜேம்ஸ் என்கிற ஏ.ஜேம்ஸ் பால் ஆரோக்கியராஜ் NIS அவரிடம் விளையாட்டு பயிற்சி எடுத்த பலரும் இன்று ரயில்வே, ஆசிரியர், கல்லூரி உடற்கல்வி ஆசிரியராக பணி புரிந்து வருகிறார்கள்.  இந்த நிலையில் முன்னாள் மாணவர்கள், மற்றும் இன்னாள் பயிற்சி பெறும் மாணவர்கள், என அனைவரும் சேர்ந்து பணி ஒய்வு விழாவான  31.05.24 அன்று பொன்மலை ரயில்வே மைதானத்தில் விழா எடுத்தார்கள்.

மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் கே.சி. நீலமேகம் தலைமையில், சாமி தற்காப்பு கலைக்கூடம் பயிற்சியாளர் டி. ஜீவானந்தம், எஸ்.ஆர்.எம்.யூ நாகராஜ் , முன்னாள் படிப்பக மன்ற உறுப்பினர்கள் இதயத்துல்லாகான், உடற்கல்வி ஆசிரியர் ரமேஷ். ஆகியோர் முன்னிலையில் நடந்தது. வந்தவர்களை திருச்சி மாவட்ட தடகள சங்க பொருளாளர் ரவிசங்கர் வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக
ரயில்வே பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் ஜீவானந்தம் வாழ்த்தி பேசும்போது, உடற்கல்வி ஆசிரியர் ஜேம்ஸ் அவர்கள் பொன்மலை ரயில்வே மைதானத்தில் உள்ள வாலிபால், பேட்மிடன்பால், மற்றும் மைதானத்தில் உள்ள பல விளையாட்டு உபகரணங்களை சொந்த செலவில் உருவாக்கினார். மேலும் விளையாட்டு வீரர்களுக்கு தனது சொந்த செலவில் விளையாட்டு பொருள்கள், பணம் உதவிகளும் செய்துள்ளார். இவரின் செயல்கள் மிகவும் போற்றக்கூடியது மட்டுமல்ல, பாராட்டுக்குரியதாகும் என்றார்.

விழா கலந்து கொண்ட அனைவரும் சேர்ந்து உடற்கல்வி ஆசிரியர் ஜேம்ஸ் அவருக்கு கேக் வெட்டி , பரிசு பொருள்கள் , மற்றும் பொன்னாடை போற்றி பாராட்டி வரவேற்றினார்.

விழாவில் தடகள பயிற்யாளர்கள் ஆரோக்கிராஜ், மோகன்ராஜ், கார்த்தி , சிலம்பம் பயிற்சியாளர் செல்வி.ஸ்ரீ, ராமசந்திரன் , தயானந்த், இளங்கோ, மற்றும் தடகள , சிலம்பம் வீரர்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்தார்கள்.

முடிவில் உடற்கல்வி இயக்குனர்.முனைவர் திருமதி .சுதமதி ரவிசங்கர் நன்றியுரையாற்றினார்

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்