பட்டினத்தார் திருநட்சத்திர விழா கோலாகலம். ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.

பட்டினத்தார் திருநட்சத்திர விழா கோலாகலம். ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.

சென்னை திருவொற்றியூர் — எண்ணுார் விரைவு சாலையில் திருவொற்றியூர் குப்பம் பகுதியில், பட்டினத்தார் திருக்கோவில் அமைந்துள்ளது.

இங்கு, ஆண்டுதோறும், ஆடி மாதம் 5ம் நாள், உத்திராட நட்சத்திரத்தில், திருநட்சத்திர விழா நடைபெறும். அதன்படி, நேற்று பட்டினத்தார் திருநட்சத்திரத்தையொட்டி, குருபூஜை நடந்தது.

அதன்படி, சற்குருநாதன் குழுவினரின் திருவீதி தேவார பாராயணத்துடன், பன்னிரு திருமுறைகளை ஊர்வலமாக கொண்டு சென்றனர்.

தொடர்ந்து, குணசேகரன் குழுவினரின் மேளக்கச்சேரி, காலை 9:30 மணிக்கு, சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. மாலை, திருமந்திர திலகம் மா.கி.ரமணனின், ஊசி பேசிய உபதேசம் என்ற தலைப்பிலான சொற்பொழிவு நடந்தது.

இரவு, பட்டினத்தார் சுவாமி உற்சவர், சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளினார். பின், கயிலாய வாத்தியங்கள் முழங்க, திருவீதி உலா நடைபெற்றது.

திரைப்பட நடிகர் சூப்பர் சுப்பராயனின் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்