பெரம்பலூர் திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து அமைச்சர் கே.என்.நேரு பிரசாரம்.
பெரம்பலூர் திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து அமைச்சர் கே.என்.நேரு பிரசாரம்.
பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கே.என்.அருண் நேரு லால்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புள்ளம்பாடி ஒன்றியத்தில் கிராமம் கிராமமாக சென்று வாக்கு சேகரித்தார்.
அப்போது திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து திமுக முதன்மை செயலாளரும்,தமிழக நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சருமான கே. என்.நேரு பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசுகையில், 1985 ஆம் ஆண்டு புள்ளம்பாடியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒன்றியசேர்மனாக பணியாற்றினேன். அதனைதொடர்ந்து 1989 ஆம் ஆண்டு லால்குடி தொகுதியின் எம்எல்ஏவாகவும்,தமிழக அமைச்சராகவும் வெற்றிபெற்று திருச்சி மாவட்டத்தில் லால்குடி சட்டமன்ற தொகுதிக்கு தேவையான அரசு திட்டங்கள், அரசு கலைக்கல்லூரி, வேளாண்மை கல்லூரி, கூட்டுறவு பாலிடெக்னிக் கல்லூரி, பெண்களுகான தொழிற்பயிற்சிநிலையம், மற்றும் கல்லூரிகளுக்கு தேவையான அலுவலக கட்டிடங்கள், தடுப்பணைகள், சாலைகள், மேம்பாலங்கள் போக்குவரத்து தேவையான புதிய பேருந்துகள்,சாலை வசதிகள் அதிக அளவில் செய்யப்பட்டுள்ளது.
லால்குடி புள்ளம்பாடி ஊராட்சி பகுதிகளுக்கு தேவையான சுத்தமான சுகாதாரமான குடிநீர் வழங்க கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகள் முடிந்தவுடன் அனைத்துகிராமங்களுக்கும் சுகாதாரமான குடிநீர்வழங்கப்பட உள்ளது. நமது பகுதிக்கு தேவையான நலத்திட்டங்கள் தொடர்ந்திடவும், மேலும் தேவையான நலத்திட்ட உதவிகள் பெற்றிடவும், தமிழக முதல்வர் ஆசி பெற்ற சின்னமான உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் அருண்நேருவை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுமாறு பேசினார்.
பிரசாரத்தில் திருச்சி திமுக மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, லால்குடி சவுந்தரபாண்டியன் எம்எல்ஏ,காங்கிரஸ் கட்சி வடக்கு மாவட்ட தலைவர் கலை, மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெய்பிரகாஷ்,புள்ளம்பாடி ஒன்றிய திமுக செயலாளர்கள் இளங்கோவன், செல்வராசா, மற்றும் சக்திவேல் , சண்முகநாதன், ஒன்றிய குழு தலைவர்கள் ரசியா கோல்டன் ராஜேந்திரன், லால்குடி ரவிச்சந்திரன் , நகர்மன்ற தலைவர் துரைமாணிக்கம்,
மாவட்ட கவுன்சிலர்கள் ஜெயலட்சுமி கருணாநிதி, பாலவினோதினி செந்தில், ஆதிநாயகி ரவி, நகர செயலாளர்கள் கல்லக்குடி பால்துரை,புள்ளம்பாடி முத்துக்குமார்,மதிமுக துரையரசன்,விடுதலை சிறுத்தைகள் கட்சி விடுதலைஇன்பன், விஜயகுமார், ஒன்றிய கவுன்சிலர்கள்,ஊராட்சி மன்ற தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக நிர்வாகிகள், கிளைக் கழக பொறுப்பாளர்கள் மற்றும் கிராம பகுதி பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
முன்னதாக புள்ளம்பாடி ஒன்றியம் முதுவத்தூர் கிராமத்தில் ஆணையடியான் கோவிலில் சாமி கும்பிட்டு பிரச்சாரத்தை தொடங்கி, தொடர்ந்து மேலரசூர், கீழரசூர்,ஒரத்தூர்,எம். கண்ணனூர்,மால்வாய், சரடமங்கலம்,நம்புகுறிச்சி, சிறுகளப்பூர்,தெரணிபாளையம்,ஊட்டத்தூர், நெய்குளம்,கண்ணாக்குடி, பிகே.அகரம்,குமுளூர், ரெட்டிமாங்குடி,பு.சங்கேந்தி, தாப்பாய்,வரகுப்பை, அலுந்தலைப்பூர், கல்லக்குடி,ஆலம்பாடி மேட்டூர்,விரகாலூர், திண்ணகுளம்,புதூர் பாளையம்,ஆலம்பாக்கம், கோவாண்டகுறிச்சி, வெங்கடாசலபுரம், புள்ளம்பாடி,இ.வெள்ளனூர்,ந.சங்கேந்தி உள்ளிட்ட கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். ஆங்காங்கே பொதுமக்கள் ஆரத்தி எடுத்து உற்சாக மாக வரவேற்பு அளித்தனர்.
இந்த பிரச்சாரத்தின் போது, திமுக ஆட்சியில் மகளிருக்கு இலவச பேருந்து வசதி, மாணவிகளுக்கு உதவித்தொகை ,காலை உணவு திட்டம், விவசாய கடன் தள்ளுபடி, மகளிர் உரிமைத் தொகை என திமுக அரசின் பல்வேறு சாதனைகளை விளக்கி பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இதனைத் தொடர்ந்து திறந்த பிரச்சார வாகனத்தில் வென்ற அவர் அப்பகுதியில் உள்ள பொது மக்களிடையே உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள் என கேட்டுக்கொண்டார்.