சிஐடியு நடத்திய மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் சங்க கூட்டம். திருச்சியில் நடந்தது.

சிஐடியு நடத்திய மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் சங்க கூட்டம். திருச்சியில் நடந்தது.

சிஐடியு மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் சங்க தமிழ்நாடு
மாநில நிர்வாகிகள் கூட்டம் திருச்சி வெண்மணி இல்லத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். சங்க பொதுச்செயலாளர் லட்சுமி,சிஐடியு மாநில குழு உறுப்பினர் செல்வி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தில் தமிழ்நாடு அரசு சுகாதாரத்துறை மக்களை தேடி மருத்துவத் திட்டத்தில் பணியாற்றுகின்ற டபிள்யூ.எச்.பி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் மாதம் ரூ26 ஆயிரம் வழங்க வேண்டும். ஊதியத்தை மகளிர் திட்டத்திடம் வழங்காமல் நேரடியாக ஊழியர்களின் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும். பணி நேரத்தை வரன்முறை செய்ய வேண்டும். கௌரவமான பணி சுழலை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 30-ந் தேதி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள சுகாதார இயக்குனர் அலுவலகம் அருகில் பெருந்திரள் முறையீடு மற்றும் காத்திருப்பு போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் மண்டல பொறுப்பாளர்கள் சாய் சித்ரா, செல்வி மகாலட்சுமி, பாலாம்பிகா, லோகேஸ்வரி, வள்ளி, கிரிஜா உள்பட மாநில நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்