சகோதரனின் காதலியிடம் பேசியதால் ஆத்திரம்: கொத்தனார் அடித்து கொலை. 4 பேர் கைது.

சகோதரனின் காதலியிடம் பேசியதால் ஆத்திரம்: கொத்தனார் அடித்து கொலை. 4 பேர் கைது

சகோதரனின் காதலியிடம் பேசியதால் கொத்தனார் அடித்து கொலை செய்யப்பட்டார் இது தொடர்பாக சிறுவன் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம் மணிகண்டத்தை சேர்ந்தவர் நாகராஜ்வயது (43). கொத்தனார் வேலை செய்து வருகிறார்,இவர் அதே பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவர் காதலித்து வந்த பெண்ணிடம் ( வீட்டில் அம்மா இருக்காங்களா) என கேட்டுள்ளார் என கூறப்படுகிறது.

இதனை பார்த்த சதீஷின் அண்ணன் ஜெகதீசன், நாகராஜனிடம் சாமியாலபட்டி குளத்துகரை அருகே வைத்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.
தொடர்ந்து ஜெகதீசன் மற்றும் அவருடைய நண்பர்களான சிலம்பரசன், தீபக் மற்றும் 17 வயதுடைய சிறுவன் ஆகியோர் சேர்ந்து நாகராஜனை தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த நாகராஜனை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த நாகராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அதனையடுத்து ஜெகதீசன் மற்றும் ஒரு சிறுவன் உட்பட நான்கு பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்த மணிகண்டம் போலீசார் 4 பேரையும் கைது செய்தனர்.பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்