திருச்சி பாலக்கரையில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கோடைக்கால நீர்மோர் பந்தல் அப்துல் சமது எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.

திருச்சி பாலக்கரையில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கோடைக்கால நீர்மோர் பந்தல் அப்துல் சமது எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.

தமுமுக, மமக  திருச்சி கிழக்கு மாவட்டம் சார்பாக மாவட்ட தலைவர் எம்.ஏ.முகமது ராஜா தலைமையில் ம.ம.க பொதுச்செயலாளரும்,ஹஜ் கமிட்டி தலைவருமான ப.அப்துல் சமது எம்.எல்.ஏ. பாலக்கரை மாவட்ட அலுவலகத்தின் அருகில் பொதுமக்களுக்கு இலவச நீர்மோர் பந்தலை திறந்து வைத்தார்.

வெயிலின் வெப்பத்தை தணித்துக் கொள்ள பொதுமக்களுக்கு தர்பூசணி பழங்கள் பொதுமக்கள் தாகம் தீர்ப்பதற்கு நீர் மோர் ஆகியவை வழங்கப்பட்டது. ம.ம.க மாவட்ட செயலாளர் அஷ்ரப் அலி,தமுமுக மாவட்ட செயலாளர் இலியாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்வில் மாவட்ட துணை நிர்வாகிகள் முகமது காசிம், ஹிர்தோஸ்சையது முஸ்தபா,அணி நிர்வாகிகள்,கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்