திருச்சியில் பரபரப்பு : 60 மூட்டை குட்காவுடன் சொகுசு கார் பறிமுதல்

திருச்சியில் பரபரப்பு : 60 மூட்டை குட்காவுடன் சொகுசு கார் பறிமுதல்

ராஜஸ்தான் வாலிபர் கைது – 2 பேர் தப்பி ஓட்டம்.

திருச்சி கோட்டை போலீசார் திருச்சி கலைஞர் அறிவாலயம் அருகாமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் வந்த ஒரு சொகுசு காரை நிறுத்தி சோதனையிட்டனர்.
அப்போது கார் டிக்கியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், கூலிப், விமல் போன்ற தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மூட்டை மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டறியப்பட்டது.
உடனே போலீசார் காரை ஓட்டி வந்த ராஜஸ்தான் மாநிலம் அங்கோடியா பகுதியைச் சேர்ந்த சுனில் குமார் (வயது 23 )என்பவரை கைது செய்தனர்.
பின்னர் அந்த சொகுசு காரை பறிமுதல் செய்து அதில் கடத்திவரப்பட்ட ஹான்ஸ் மூட்டை 20, 2ப் கூலி மூட்டைகள், 20 மூட்டை விமல் புகையிலை உட்பட மொத்தம் 422 கிலோ எடை கொண்ட ரூபாய் இரண்டு லட்சத்து 72 ஆயிரத்து 880 மதிப்பிலான 60 மூட்டை குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக பெங்களூரைச் சேர்ந்த கிஷோர் குமார் ,திருச்சியை சேர்ந்த இம்ரான் ஆகிய இரண்டு பேரை தேடி வருகின்றனர்.
மூட்டை மூட்டையாக குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்