திருச்சி மாவட்ட ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் கத்னா முகாம்.
திருச்சி மாவட்ட ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் கத்னா முகாம்.
ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக்கழகம் (ஐ.மு.மு.க) திருச்சி மாவட்டம் சார்பாக இன்று திருச்சி மஹாலட்சுமி நகரில் உள்ள வலிமா மினி ஹாலில் இஸ்லாமிய ஏழை குழந்கைகளுக்கு சுன்னத் (எனும்) கத்னா முகாம் நடைபெற்றது. முகாமை பாரம்பரிய சுன்னத் நிபுனர் ஷேக் உமர் ஹத்தாப் (மாலி) துவைக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாநில துணைப் பொதுச்செயலாளர், மஞ்சக்குடி. பாபு (எ) அப்துல் ரஹீம், மாவட்ட தலைவர் அப்துல் ஹக்கீம், மாவட்ட செயலாளர் ஜாகிர் உசேன், மாவட்ட பொருளாளர் பெல்ட்.காதர் ஆகியோர்கள் முன்னிலை வகித்தார்கள்.
இந்நிகழ்வில் மாவட்ட துணை, மற்றும் கிளை நிர்வாகிகள் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டார்கள்.