புதுக்கோட்டையில் அடுத்த மாதம் 13-ந் நகை அடகு பிடிப்போர்கள் கூட்டமைப்பு சங்க மாநாடு. அமைச்சர் ரகுபதி, விக்கிரமராஜா, கோவிந்தராஜுலு பங்கேற்பு.

புதுக்கோட்டையில் அடுத்த மாதம் 13-ந் நகை அடகு பிடிப்போர்கள் கூட்டமைப்பு சங்க மாநாடு. அமைச்சர் ரகுபதி, விக்கிரமராஜா, கோவிந்தராஜுலு பங்கேற்பு.

தமிழ்நாடு நகை அடகு பிடிப்போர்கள் கூட்டமைப்பு சங்கத்தின் செயற்குழு கூட்டம் திருச்சி – தஞ்சை ரோடு காந்தி மார்க்கெட் ஸ்ரீ அம்பாள் பைனான்ஸ் கூட்ட அரங்கில் மாநிலத் தலைவர் எஸ்.கந்தன் தலைமையில் நடந்தது. மாநில பொதுச் செயலாளர் எஸ்.வி.அன்பழகன், மாநில பொருளாளர் அம்பாள் ஸ்ரீ என்.பி. ராம்குமார்,செயல் தலைவர் எஸ்.ஆர்.வி.கண்ணன், கூடுதல் செயலாளர் துரைச்சாமி கே.கே.நகர் வி.எஸ்.மணிகண்டன் மணப்பாறை என். ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் மறைவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. கூட்டத்தில் துணைத் தலைவர்கள் ராஜேந்திரன், என்.எஸ்.பி சேகரன்,பி.ஜி.சேகரன், இணைச்செயலாளர் அருட் செல்வம், இளைஞர் அணி தலைவர் விமல் ராஜ், அருண் பாலாஜி மற்றும் திரளான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டமைப்பின் மாவட்ட செயலாளர் பரமசிவம் வரவேற்றார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி மாநில தலைவர் எஸ்.கந்தன் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு :-

அடுத்த மாதம் 13-ந் தேதி புதுக்கோட்டை மாவட்ட இணைப்பு விழாவை சிறப்பாக நடத்துவது ,தொடர்ந்து புதுக்கோட்டையில் அன்று பிரம்மாண்ட மாநாடு நடத்துவது, மாநாட்டிற்கு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, மாநில பொதுச் செயலாளர்கோவிந்தராஜுலு, மாநில சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆகியோரை அழைப்பது,மாநாட்டு ஏற்பாடு பணிகளை புதுக்கோட்டை மாவட்ட தலைவர் செந்தில்வேலன், மாவட்ட செயலாளர் கோபி, பொருளாளர் குமார், ஒருங்கிணைப்பாளர் கண்ணன் ஆகியோர் தலைமையில் சிறப்பாக செய்வது, மாநாட்டில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு கோரிக்கைகளை வென்றெடுப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

பின்னர் மாநில தலைவர் எஸ்.கந்தன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறும்போது, புதுக்கோட்டையில் அடுத்த மாதம் 13-ந் தேதி தமிழ்நாடு நகை அடகு பிடிப்போர்கள் கூட்டமைப்பு மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரம ராஜா, மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜூலு மற்றும் திரளான வணிகர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்