திருச்சி ஜோசப் கண் மருத்துவமனையில் உலக மகளிர் தினம்.

திருச்சி ஜோசப் கண் மருத்துவமனையில் உலக மகளிர் தினம்.

திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் ரோட்டரி கிளப் திருச்சிராப்பள்ளி பட்டர்பிளை இணைந்து நடத்திய மகளிர் தின கொண்டாட்டம் இன்று காலை ஜோசப் கண் மருத்துவமனை அரங்கில் நடைபெற்றது.

இதில் எக்ஸெல் துணை தலைவர் கே.எஸ்.வித்யா உள்பட 33 பெண்களை தேர்ந்தெடுத்து, பெண் சாதனையாளர் விருது வழங்கினார்கள். இதில் சிறப்பு விருந்தினராக திருச்சி தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை சார்ந்த பேராயர் டாக்டர் எஸ்தர் சாம்ராஜ் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் லட்சுமி பிரபா , ஜோசப் கண் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் பிரதீபா கலந்துகொண்டு பெண்களுக்கான சிறப்பு தனித்துவ செய்தியை வழங்கினார்.மற்றும் நிர்வாகிகள் சுபா பிரபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்