திருச்சியில் நூன் அறக்கட்டளை சார்பாக வாகனத்தில் சென்று பொது மக்களுக்கு நீர் மோர் கொடுக்கும் நிகழ்ச்சி.

திருச்சியில் நூன் அறக்கட்டளை சார்பாக வாகனத்தில் சென்று பொது மக்களுக்கு நீர் மோர் கொடுக்கும் நிகழ்ச்சி.

திருச்சி மாரிஸ் திரையரங்கம் அருகில் உள்ள ஈத்கா பள்ளிவாசல் மைதானத்தில் நூன் அறக்கட்டளை சார்பாக பொதுமக்களுக்கு வாகனத்தில் அந்தந்த பகுதிகளுக்கே சென்று நீர்மோர் கொடுக்கும் நிகழ்ச்சி ஈத்கா மைதானத்தில் நூன் அறக்கட்டளை நிர்வாகிகள் தலைவர் கே முஸ்தபா துணைத்தலைவர் வி எம் சாகுல் ஹமீது வி. சையது முஸ்தபா செயலாளர் எம் இப்ராஹிம் கலீல் துணைச் செயலாளர் எம் அப்துல் ரஷீத் எம் யாசர் அரஃபாத் பொருளாளர் எ. சிராஜுதீன்
ஒருங்கிணைப்பாளர் பி முஹம்மது ஜக்கரியா ஆகியோர் முன்னிலையில் நீர்மோர் வாகனத்தை அருட்பணி முனைவர் க சார்லஸ் (இயக்குனர் ஜான் பால் உரையாடல் மன்றம் திருச்சி கத்தோலிக்க மறை மாவட்டம்) மற்றும் சகோதரி தேவகி (பிரம்ம குமாரிகள் இயக்கம் உறையூர் திருச்சி ) மௌலானா எம் அல்அமீன் யூசுபி (நூன் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர்) மௌலவி எம் முஹம்மது மீரான் மிஸ்பாகி (மாநிலத் துணைத் தலைவர் மாநில ஜமாத்துல் உலமா சபை நிர்வாக குழு நூன் அறக்கட்டளை) ஆகியோர் கூட்டாக கொடியசைத்து வாகன நீர் மோர் நிகழ்வை தொடங்கி வைத்தார்கள்.

வாகனத்தில் திருச்சியில் முக்கிய பகுதியான சத்திரம் பேருந்து நிலையம் மரக்கடை அரசு மருத்துவமனை உறையூர் மற்றும் மக்கள் அதிகம் கூடும் உள்ள இடங்களில் பொதுமக்களுக்கு நீர் மோர் கொடுத்து அவர்களுடைய தாகத்தை தனித்தனர் நூன் அறக்கட்டளை நண்பர்கள்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்