நான் மீண்டும் போட்டியிட விரும்பியவர்களுக்கும், என் வாய்ப்புக்காக உதவிட முயன்றவர்களுக்கும், மக்களவை உறுப்பினராக நான் தொடரக் கூடாதென இத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிட்டாமல் போக முயன்றவர்களுக்கும் நன்றி.

திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினர் மீண்டும் போட்டியிட

வாய்ப்பு கிடைக்காததை கருத்தில் கொண்டு பகிரங்க அறிக்கை

திருச்சி மக்களவை உறுப்பினர் சு. திருநாவுக்கரசர், மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத விரக்தியை வெளிப்படுத்தும் விதமாகவும், மக்களுக்கு நன்றி கூறும் விதமாகவும் பகிரங்க அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்திருப்பது :
திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, ஸ்ரீரங்கம், திருவெறும்பூர், புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய திருச்சி மக்களவைத் தொகுதியில், கடந்த 17 ஆவது மக்களவைத் தேர்தலின் போது காங்கிரஸ்}திமுக கூட்டணியில் வேட்பாளராக காங்கிரஸ் சார்பில் நான் போட்டியிட்டேன். எனக்கு மொத்தத்தில் பதிவான 10,48,779 வாக்குகளில் 6,29,285 வாக்குக அளித்து, சுமார் 4,60,000 வாக்குகள் வித்தியாசத்தில் (இந்தியாவிலேயே காங்கிரஸ் வேட்பாளர்களிலேயே அதிக வித்தியாசத்தில்) வெற்றி பெறச் செய்த திருச்சி மக்களவைத் தொகுதி வாக்காளப் பெருமக்கள் அனைவரின் பாதங்களையும் தொட்டு என் நன்றியை காணிக்கையாக்குகிறேன்.
கடந்த 5 ஆண்டுகளில் கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்ட ஒன்றரை ஆண்டுகள் நீங்கலாக, நான் திருச்சி மக்களவைத் தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து சுமார் ரூ.17 கோடியை பல்வேறு மக்கள் நலத்திட்டங்களுக்காக வழங்கி, முறையாக பயன்படுத்தப்பட்டுள்ளது. மொத்தம் 288 பணிகள் ஆறு சட்டமன்ற தொகுதியிலும் என்னால் செய்து முடிக்கப்பட்டுள்ளது. கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை தொடங்கி அனைத்து பணிகளிலும் எந்த லஞ்ச, ஊழல் புகார்களுக்கும், உள்ளாகாமல், நேர்மையாக பணியாற்றியுள்ளேன். திருச்சியில் செயல்பட்ட எனது அலுவலகம், சென்னை, தில்லி அலுவலகங்களில் இருந்தும் எனது சுற்றுப்பயணத்தின் போதும் பெறப்பட்ட சுமார் ஆயிரக்கணக்கான மனுக்களை மத்திய, மாநில அமைச்சர்களுக்கும், உரிய அரசு துறைகளுக்கும் அனுப்பி, பல்வேறு விதமான மக்கள் நலப்பணிகளை செய்துள்ளேன். அதேபோல் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் மனுதாரர்களுக்கு கடிதம் வாயிலாக தகவல்களும் தெரிவித்துள்ளேன்.
தேர்தல் வாக்குறுதியாக, சுமார் 10 ஆண்டு காலமாக முடிவு பெறாமல் “தொங்கு பாலம்” என்று சொல்லப்பட்டு வந்த ஜங்ஷன் மேம்பாலத்திற்கு ராணுவ இடம் பெறப்பட்டு கட்டி முடிக்கப்பட்டது. பி.எச்.இ.எல், துப்பாக்கி தொழிற்சாலை, ராணுவத்திற்கான டாங்கி தொழிற்சாலை, ரயில்வே தொழிற்சாலை, மத்திய வாழை ஆராய்ச்சி நிறுவனம், மத்திய கல்வி தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவை திறம்பட இயங்க உதவிகள் புரிந்துள்ளேன்.
விமான நிலைய கமிட்டிக் கூட்டம், மாவட்ட வளர்ச்சிக் குழு கூட்டம், ஆகியனவற்றின் தலைமை ஏற்று நடத்தி திருச்சி புதுக்கோட்டை மாவட்டங்களின் மக்கள் நலப் பணிகள் சீராக நடைபெற ஆய்வு செய்து ஆலோசனைகள் வழங்கியுள்ளேன். தொல்லியல் துறையை தமிழக மாநிலத்தில் இரண்டாகப் பிரித்து திருச்சியை மையமாகக் கொண்டு 20 மாவட்டங்கள் உள்ளடக்கிய மண்டல அலுவலகத்தை கொண்டு வந்துள்ளேன். திருச்சி மாநகராட்சியில் பொலிவுறு நகரத் திட்டம் (ஸ்மார்ட் சிட்டி) மூலம் தொழில்நுட்ப பூங்கா, புதிய இணைப்பு ரயில்கள், புதிய விமான சேவைகள், புதிய பேருந்து நிலையம், குடிநீர் வடிகால் பணிகள் இப்படி பல பணிகள் நடைபெற குரல் கொடுத்தும், துணை நின்றும் செயல்பட்டுள்ளேன். திருச்சிக்கு மெட்ரúô ரயில் திட்டம் வர பாராளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளேன்.
திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் நடைபெற்ற மத்திய – மாநில அரசுகளின் ஆயிரக்கணக்கான கோடிகளில் மேற்கொள்ளப்பட்ட பல வளர்ச்சிப் பணிகளில் எந்த லஞ்ச லாவன்யங்களிலும் ஈடுபடாமல் பணிகள் நிறைவேற்றப்பட துணை நின்று ஒத்துழைப்பு வழங்கியுள்ளேன். எந்த மக்களவைத் தொகுதி உறுப்பினரும் செய்யாத வகையில் திருச்சி தொகுதியில் 87 மாற்றுத் திறனாளிகளுக்கு சுமார் ரூ. 53.4 லட்சம் மதிப்பிலான 87 நான்கு சக்கர பெட்ரúôல் ஸ்கூட்டர்களை வழங்கியுள்ளேன். மாணவ, மாணவியர்களின் கல்வி மேம்பாட்டுக்கும் உதவியுள்ளேன். மக்களவையில் 70 சதவிகித வருகைப் பதிவேடுடன், மொத்தம் 37 விவாதங்களில் பங்கேற்றுள்ளேன். ஜீரோ அவர், விதி எண் 377 மற்றும் 358 வினாக்கள் 4 தனிநபர் மசோதாக்கள் கொண்டு வந்து பாராளுமன்றத்தில் உரையாற்றியுள்ளேன்.
இத்தொகுதியில் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றிட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், இத் தொகுதி மக்களுக்காக எனது பணி எப்போதும் தொடரும். திருச்சியை மாநிலத்தின் இரண்டாவது தலைநகராக்க தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன். தமிழகத்தின் மையப்பகுதியான திருச்சியை மையமாகக் கொண்டு எனது அரசியல் செயல்பாடுகள் தொடர்ந்து இருக்கும். மக்கள் என்னை எப்போதும் சந்திப்பது போலவும், தொலைபேசி வாயிலாகவும், திருச்சி அலுவலகத்திலும் எப்போதும் போல் என்னை சந்திக்கலாம். தொடர்பு கொள்ளலாம். கடந்த சுமார் 47 ஆண்டுகளாக எனக்குள்ள மத்திய – மாநில அரசுகளின் தொடர்பு, அனுபவம் ஆகியனவற்றின் அடிப்படையில் முடிந்த நன்மைகளை திருச்சி தொகுதி மக்களுக்கும், தமிழக மக்களுக்கும் தொடர்ந்து செய்து பணியாற்றுவேன். 1977}ல் எம்.ஜி.ஆôó அவர்களால் சட்டமன்ற உறுப்பினரான காலம் முதல் மத்திய மாநில பொறுப்புகளில் இருந்தும், சட்டமன்ற, மக்களவை உறுப்பினராக இருந்தபோதும், இதுவரையில் நான் மக்கள் பணியிலிருந்து ஓய்வு எடுத்ததே கிடையாது.
என் வாழ்நாளில், என் இல்லத்தில் நான் இருந்த நாள்களை காட்டிலும் மக்களோடு நான் இருந்த நாட்களே அதிகம். தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் பல முறை சுற்றி வந்து மக்களை சந்தித்துள்ளேன். எனது மக்கள் பணி தொடரும். நான் நாடாளுமன்ற உறுப்பினராக செயல்பட்டபோது உதவிய, துணை நின்ற மாநில,மத்திய அரசு அலுவலர் பெருமக்கள், காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட, தோழமைக் கட்சிகளின் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், நிர்வாகிகள், தொண்டர்கள் பல்வேறு பொது நல சங்கங்கள், அமைப்புகள், இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ அமைப்புகள், அவற்றின் தலைவர்கள், பொதுமக்கள் என ஒத்துழைப்பு நல்கிய அனைத்து பெருமக்களுக்கும் எனது நன்றி.
இத்தேர்தலில் நான் மீண்டும் போட்டியிட விரும்பியவர்களுக்கும், என் வாய்ப்புக்காக உதவிட முயன்றவர்களுக்கும், மக்களவை உறுப்பினராக நான் தொடரக் கூடாதென இத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிட்டாமல் போக முயன்றவர்களுக்கும் நன்றி.
“தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்,
தர்மம் மறுபடியும் வெல்லும்”
மீண்டும் தொகுதி மக்களுக்கு, நன்றியும், வாழ்த்தும், வணக்கமும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்