தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
அரபிக் கடலில் நிலவும் சலனம் மூலமாக தமிழகத்தின் ஊடாக ஈரப்பதம் மிகுந்த கீழைக் காற்று ஊடுருவல் அமைகிறது என்பதால் நள்ளிரவு அதிகாலை நேரத்தில் கடலோரப் பகுதிகளில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு உள்ளது. தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் கடலோரப் பகுதிகளில் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக தகவல்.