மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் உங்கள் கார்கள் பாதிக்கப்பட்டுள்ளதா?: இழப்பீடு பெறுவதற்கான வழிமுறை

வெள்ளத்தால் உங்கள் கார்கள் பாதிக்கப்பட்டுள்ளதா?:

இழப்பீடு பெறுவதற்கான வழிமுறை

* வெள்ளத்தில் மூழ்கியிருந்த உங்கள் காரை உடனடியாக ஸ்டார்ட் செய்யவேண்டாம். இது உங்கள் காரை மேலும் அதிக பாதிப்படைய வைக்கும். இப்படி செய்தால் உங்களின் கார் இன்சூரன்ஸ் கிடைக்காமலும் போகலாம்.

* உங்களின் கார் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது என்று முதலில் கார் காப்பீட்டு நிறுவனத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

* உங்கள் கார் பற்றிய முக்கிய ஆவணங்கள் அனைத்தையும் சேமிக்கவும். உங்களின் கார் நிலை குறித்த புகைப்படம், வீடியோ போன்றவற்றை எடுத்துக்கொள்ளுங்கள். இதனால் உங்கள் காரின் பாதிப்பு குறித்த விவரங்கள் துல்லியமாக தெரியவரும்.

* முழு இன்சூரன்ஸ் செய்தவர்கள், சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் முறையான ஆவணங்களைச் சமர்ப்பித்து, இழப்பீடு பெறலாம்.

* மழையில் பாதித்த வாகனத்தை, முடிந்தால் பழுது பார்க்கும் மையத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.

* மெக்கானிக் சேதத்தை ஆய்வு செய்து, ‘எஸ்டிமேட் காஸ்ட்’ என்ற உத்தேச செலவு அறிக்கை வழங்குவார். அதனுடன், இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு செல்ல வேண்டும்

* அங்கு, நிறுவனம் தரும், ‘கிளெய்ம் பார்ம்’ என்ற இழப்பீடு படிவத்தை பூர்த்தி செய்து, உத்தேச செலவு அறிக்கையுடன் சமர்ப்பிக்க வேண்டும்

* இன்சூரன்ஸ் நிறுவனம், மதிப்பீட்டாளரை அனுப்பி வாகனத்தை ஆய்வு செய்யும்.

* மதிப்பீட்டாளர், வாகனத்தை நேரில் ஆய்வு செய்து, அறிக்கையை இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் வழங்குவார்.

* நிறுவனம்,  தான் ஒப்பந்தம் செய்துள்ள பழுது பார்க்கும் மையத்தில் வாகனத்தை ஒப்படைக்க பரிந்துரைக்கும்

* வாகன உரிமையாளர், அதை ஏற்காவிட்டால்,  தன் விருப்பப்படி, எங்கு வேண்டுமானாலும் பழுதை சரி செய்யலாம். அதற்கான ரசீதை, இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் வழங்க வேண்டும். வாகனம் தயாரிக்கப்பட்ட ஆண்டை பொறுத்து, தேய்மான செலவை பிடித்து கொண்டு, இழப்பீடு தொகை வழங்கப்படும்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்