118 தனிமங்களின் பெயரை வேகமாக 2.51 நிமிடத்தில் சொல்லி உலக சாதனை படைத்த மாணவிக்கு பாராட்டு.
கடையநல்லூரில் அரசு உதவி பெறும் மசூதைக்கா மேல்நிலைப்பள்ளி மாணவி
118 தனிமங்களின் பெயரை வேகமாக 2.51 நிமிடத்தில் சொல்லி உலக சாதனை படைத்த மாணவிக்கு பாராட்டு.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மசூது தைக்கா மேல்நிலைப் பள்ளி 12ஆம் வகுப்பு மாணவி சப்ரீன்,
வேதியலில் உள்ள 118 தனிமங்களின் பெயர்களை முன்னோக்கிய திசையில் கூறிக்கொண்டே பின்னோக்கிய திசையில் அதன் குறியீடுகளை 2.51 நிமிடத்தில்விரைவாக கூறி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றார் அதற்கான பாராட்டு விழா முன்னாள் மாணவர்கள் வெளிநாட்டு வாழ் தமிழர்கள் நலச்சங்கம் சார்பில் நடைபெற்றது.
விழாவிற்கு பள்ளியின் தாளாளர் ஹசன் மக்தூம் ஆலிம் சாஹிப் தலைமை தாங்கினார், கௌரவ தலைமை இமாம் அப்துல் வாஹித் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் சிக்கந்தர் ரஹ்மான் அனைவரையும் வரவேற்றார்.
பேட்டை பள்ளிவாசல் ஜமாத் தலைவர் சையத் இப்ராஹிம், வெளிநாட்டு வாழ் தமிழ் சங்க உறுப்பினர் அப்துல் வாஹித் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார் பள்ளியின் தாளாளர் ஹசன் மக்தூம் சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வெளிநாட்டு வாழ் தமிழ்ச் சங்கம் உறுப்பினர்கள் திவான், இஸ்மாயில், சையது சுலைமான், அசார், ஜுபைர், சித்திக் ஆகியோர் ஏற்பாடு செய்தனர் நிகழ்ச்சியில் பேட்டை பள்ளிவாசல் ஜமாத் பொருளாளர் நகர் பாவா, துணைத்தலைவர் சாகுல் ஹமீது, ஆடிட்டர் அப்துல்லாஹ் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.