திருச்சி தெற்கு மாவட்ட தேமுதிக சார்பில் கொடியேற்று விழா.

திருச்சி தெற்கு மாவட்ட தேமுதிக சார்பில் கொடியேற்று விழா.

மாவட்ட செயலாளர் ஆர்.பாரதிதாசன் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு.

திருச்சி தெற்கு மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் மணப்பாறை தெற்கு ஒன்றியம் புத்தாநத்தம் ஊராட்சி வடக்கு இடையபட்டியில் தே.மு.தி.க. கொடியேற்று விழா நடைபெற்றது.

இவ்விழாவில் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், மாத்தூர் ஊராட்சி மன்ற தலைவருமான ஆர். பாரதிதாசன் கழக கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கினார். இவ்விழாவில் மாவட்ட கழக அவைத் தலைவர் ஒன்றிய கவுன்சிலர் அர்ஜுன் , மாவட்ட துணைச் செயலாளர் சரவணன், தலைமை செயற்குழு உறுப்பினர் வக்கீல் முல்லை சந்திரசேகர், மணப்பாறை தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர் வேல்முருகன், மாவட்ட கேப்டன் மன்ற செயலாளர் கணேசன் ,ஒன்றிய பொருளாளர் செல்வேந்திரன், ஒன்றிய வர்த்தக அணி கணேசன், ஒன்றிய தொண்டர் அணி ராஜா, ஊராட்சி செயலாளர் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர் .

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்