கஞ்சா கடத்தி வந்த ஐந்து நபர்கள் கைது, 10 கிலோ கஞ்சா பறிமுதல்.

கஞ்சா கடத்தி வந்த ஐந்து நபர்கள் கைது, 10 கிலோ கஞ்சா பறிமுதல்.

தென்காசி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் ஆகியவற்றின் புழக்கத்தை முற்றிலும் தடுக்கும் விதமாக *தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. G.S. மாதவன் T.P.S.,* அவர்களின் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இன்று (18.02.26) தென்காசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பண்பொழியில் இருந்து தென்காசி செல்லும் சாலையில் கஞ்சா கடத்துவதாக காவல்துறைக்கு கிடைக்க ரகசிய தகவலின் பேரில் தென்காசி காவல் ஆய்வாளர் திரு. ராபர்ட் ஜெய்ன் அவர்கள் மற்றும் சார்பு ஆய்வாளர் திரு. சத்ய வேந்தன் ஆகியோர் தலைமையிலான காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு தென்காசி குத்துக்கல்வலசையில் வைத்து மேற்படி கஞ்சா கடத்தி வந்த நெட்டூர் பகுதியை சேர்ந்த இசக்கி குமார் (வயது 31), பேச்சு முத்து (வயது 32), அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்த நைனார் விக்னேஷ் (வயது 32), ராஜாராம் @ கோபி (வயது 26) மற்றும் அய்யனார்குளம் பகுதியை சேர்ந்த மனோ ரஞ்சித் (வயது 21) ஆகிய ஐந்து நபர்களை சுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்தனர்.

மேலும் அவர்களிடமிருந்து 10 கிலோ கஞ்சா, பைக், கார் மற்றும் லாரி ஆகிய வாகனங்களும், மேற்படி நபர்கள் பயன்படுத்திய செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை செய்து பின்பு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்