திருச்சி ஓயாமரி சுடுகாட்டில்பிணம் போல் படுத்து விவசாயிகள் போராட்டம். போலீசார் பேச்சுவார்த்தை.
திருச்சி ஓயாமரி சுடுகாட்டில்பிணம் போல் படுத்து விவசாயிகள் போராட்டம். போலீசார் பேச்சுவார்த்தை.
திருச்சியில் உள்ள ஓயாமரி சுடுகாட்டில் பிணம் போல் படுத்து விவசாயிகள் மூன்றாவது நாள் போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டதுநடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
கர்நாடகா மற்றும் கேரளா அரசு புதிய அணை கட்டுவதை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,
காவிரி ஆற்றில் நதிநீர் பங்கீட்டின்படி தண்ணீர் திறந்து விட வேண்டும்,
விவசாயிகளின் விலைப் பொருளுக்கு லாபகரமான விலை அறிவிக்க வேண்டும்,
விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் மூன்றாவது நாளாக இன்றும் போராட்டம் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக திருச்சி ஓயாமரி
சுடுகாட்டில் உள்ள தகன மேடையில் விவசாயிகள் பிணம் போல படுத்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தை கைவிடுமாறு காவல்துறையினர் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்..