திருச்சி உறையூர் பஞ்சவர்ணசுவாமி கோயில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்த வேண்டும் தெய்வத் தமிழ் பேரவை மனு.

திருச்சி உறையூர் பஞ்சவர்ணசுவாமி கோயில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்த வேண்டும் தெய்வத் தமிழ் பேரவை மனு.

திருச்சி உறையூர் பஞ்சவர்ண சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்தக்கோரி தெய்வதமிழ் பேரவை சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

திருச்சி உறையூர் அருள்மிகு காந்திமதி அம்மை உடனுறை ஐ வண்ண நாதர் (பஞ்சவர்ண சாமி) திருக்கோயில் குடமுழுக்கு மார்ச் 20 ஆம் தேதி புதன்கிழமை காலை நடைபெறுகிறது. திருக்கோயில் குடமுழுக்கில் வேள்விச்சாற்றுவது (யாகசாலை), கோபுரக் கலச நன்னீராட்டு, கருவறை பூசை ஆகிய மூன்று நிலைகளிலும் தமிழ் மந்திரங்கள் ஓதி, திருமுறைகளைப் பாடி அர்ச்சனை செய்து, தமிழ் வழியில் வழிபாடு நடத்தவேண்டும் என, தெய்வத்தமிழ் பேரவையின் சார்பில் இந்து சமய அறநிலையத்துறை) திருக்கோயில் செயல் அலுவலர், இணை ஆணையர் உள்ளிட்டோரிடம் மனு அளிக்கப்பட்டது.
தெய்வத் தமிழ்ப் பேரவை திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பூ.இராமராசு தலைமையில் மூ.த. கவித்துவன், தமிழ் தேசிய பேரியக்க மாநகர செயலாளர் வே.க.இலக்குவன், நா. இராசாரகுநாதன், பொன்.மணிகண்டன், சுப்பிரமணியன், சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் மனுவை வியாழக்கிழமை அளித்தனர்.
தஞ்சை (பெருவுடையார்) பெரிய கோயில், கரூர் பசுபதீஸ்வரர் கோயில் ஆகியவற்றின் குடமுழுக்கின் போதும், உயர் நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய தீர்ப்புகளை சுட்டிக்காட்டி அதன்படி தமிழ் வழியில் நடத்த கோரி மனுவில் வலியுறுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்