திருச்சி பஸ் நிலையங்களில் நிரம்பிய கூட்டம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கு பொதுமக்கள் பாராட்டு.
திருச்சி பஸ் நிலையங்களில் நிரம்பிய கூட்டம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கு பொதுமக்கள் பாராட்டு.
பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து சொந்த ஊரிலிருந்து ஏராளமானோர் புறப்பட்டதையடுத்து திருச்சியில் ரயில் மற்றும் பஸ் நிலையங்களில் அதிகளவிலான பயணிகள் கூட்டம் காணப்பட்டது.
பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்த நிலையில் சொந்த ஊருக்கு குடும்பத்துடன் சென்றிருந்த பொதுமக்கள், பணி, கல்வி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அவரவர் தங்கியுள்ள ஊர்களுக்கு புறப்பட்டனர். தமிழக அரசு பொங்கல் பண்டிகை விடுமுறையை கருத்தில் கொண்டு சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகின்றது. மாநிலத்தின் மையப் பகுதி திருச்சி என்பதால், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாகவே திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம், மத்திய மற்றும் சத்திரம் பேருந்து நிலையங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது.
குறிப்பாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மிகவும் அதிகளவில் காணப்பட்டது.
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில், பகலிலிருந்தே பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. ரயில்களிலும் முன்பதிவில்லை பெட்டிகளில் ஏராளமான பயணிகள் பயணித்தனர். அதுபோல பஸ் நிலையங்கள் மற்றும் பேருந்துகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. முன்பதிவு செய்து பயணிக்க அரசு ஏற்பாடு செய்திருந்த நிலையிலும், முன்பதிவில்லா பேருந்துகளிலும் வழக்கம் போலவே கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததையடுத்து, திருச்சி மன்னார்புரம் மற்றும் மத்தியபேருந்து நிலையம் அருகே சோனா மீனா திரையங்கம் பகுதிகளில் தற்காலிக பேருந்து நிலையங்கள் சனிக்கிழமை முதல் செயல்பட்டன.
மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இதனால் மக்கள் சிரமமின்றி பயணம் செய்தனர்.அரசு போக்குவரத்துக் கழகத்தின் சிறப்பான செயல்பாட்டிற்காக பொதுமக்கள் பயணிகள் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.