தொடர் மழை திருச்சி உள்பட 17 மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை.
தொடர் மழை திருச்சி உள்பட 17 மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை.
தமிழகத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக, இன்று கடலுார் , செங்கல்பட்டு, விழுப்புரம், தஞ்சை, திருச்சி, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, திருவாரூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், சிவகங்கை, ஆகிய 12 மாவட்டங்களில் பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்று (அக்.22) விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை, புதுக்கோட்டை, நாமக்கல், பெரம்பலூர், சேலம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும், விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் யூனியன் பிரதேசமான புதுச்சேரி மாநிலத்தில் புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து, சென்னை வானிலை மையம் சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டதை அடுத்து, 17 மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் மட்டுமின்றி பெற்றோர்களும் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.