அடிமனை உரிமை மீட்பு குறித்த ஆலோசனைக் கூட்டம். ஏராளமானோர் பங்கேற்பு.
அடிமனை உரிமை மீட்பு குறித்த ஆலோசனைக் கூட்டம். ஏராளமானோர் பங்கேற்பு.

திருவானைக்கோவில் அடிமனை உரிமை மீட்பு சம்மந்தமாக திருவானைக்கோவில் அறுநாட்டு வெள்ளாளர் திருமணமண்டபத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு 5வது வார்டு மாமன்ற உறுப்பினர் அப்பீஸ்.முத்துக்குமார் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். இதை தொடர்ந்து திருவானைக்கோவில் அடிமனை உரிமை மீட்பு குழு சார்பாக எம்.மாரி(எ)பத்மநாபன் வரவேற்புரை ஆற்றினார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பாலுமகேந்திரன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

கூட்டத்தில் அனைத்து கட்சியை சார்ந்த முக்கிய பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் மற்றும் அடிமனை உரிமையாளர்கள் சுமார் 150 நபர்களுக்கு மேல் கலந்து கொண்டு அவர்களுடைய ஆலோசனையையும் சந்தேகங்களையும் தெளிவாக கேட்டு தெரிந்துக்கொண்டனர்.
கூட்டதின் வாயிலாக திருச்சி, திருவானைக்கோவில் ஜெம்புகேஸ்வர் அகிலாண்டேஸ்வரி கோவில் உதவிஆணையர்/செயல் அலுவலர் அவர்களால் கடந்த 25.09.2023ம் தேதி அன்று திருச்சி, ஸ திருவரங்கம் சார்பதிவாளர் அவர்களுக்கு ந.க.எண். 234/1433/அ4 என்ற செயல் முறை உத்தவை பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவை நீக்கம் செய்ய கோரி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் விஜயலெட்சுமி, கனகராஜ் மற்றும் டைமன்.திருப்பதி, கலைமணி, காமராஜ், . வெங்கடேசன், ஐயப்பன், தீட்சதர்.பாலு, பாபு, ஹரிஹரன், அன்பழகன், கார்த்தி, மனோகரன், பாபா பாலாஜி, மே.கொ.பே.பரமசிவம், சேகர், பாஸ்கர், அழகுராஜா, கிருபாகரன் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் கலந்து
கொண்டனர்.
முன்னாள் அறங்காவலர். ராஜ் நன்றி கூறினார்.