சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சேதமடைந்த பொன்மலை ரெயில்வே பாலம் சீரமைப்பு பணி  துவக்கம்.

சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சேதமடைந்த பொன்மலை ரெயில்வே பாலம் சீரமைப்பு பணி  துவக்கம்.

பூஜையுடன் பணிகள் இன்று தொடங்கியது

திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பொன்மலை ரயில்வே ஸ்டேஷன் ஜீ கார்னர் அருகே திருச்சி-சென்னை மார்க்கத்தில் உள்ள பாலத்தின் ஒரு பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டு ஜன.11-ந் தேதி இரவு

பழுது ஏற்பட்டது.

சேதமான பாலத்தில் முதற்கட்ட சீரமைப்பு பணிகளை தொடங் குவதற்காக சென்னை ஐ.ஐ.டி.யின் சிவில் இன் ஜினியரிங் துறை கட் டமைப்பு பொறியியல் பேராசிரியர் அழகு சுந்த ரமூர்த்தி ஆய்வு மேற் கொண்டார். ஐ.ஐ.டி. நிபுணர்களின் அறிக்கையை தேசிய நெடுஞ்சாலை ஆணையத் திடம் சமர்ப்பித்துள்ளனர்.

திருச்சி என்.ஐ.டி.

நிபுணர் ஒருவர் பாலத்தை வலுப்படுத்துவதற்கான குறுகிய கால தீர்வையும் சமர்ப்பித்துள்ளார்.

அதன்படி பாலம் கட்டு மான பணிகளில் அனுப வம் வாய்ந்த நிபுணர்களை கொண்டு பொன்மலை ரயில்வே ஸ்டேஷன் அருகே பாலத்தின் சேதம டைந்த பகுதியில் வலுப்ப டுத்தும் பணிகள் பூஜையுடன்  இன்று தொடங்கியது. மேலும் பாலத்தில் மண்அரிப்பு ஏற்பட்ட பகுதியை

வலுப்படுத்த மணல் நிரப் பும் முறை மாற்றியமைக் கப்படுகிறது.

பொங்கல் பண்டிகை விடுமுறையாக இருந் தாலும் தேசிய நெடுஞ் சாலை ஆணையம் நவீன இயந்திரங்கள் உபகர ணங்கள் சாரக்கட்டுமான பொருட்களை திரட்டி பழுது சீரமைக்கும் பணி களை தொடங்கி நடந்து வருவதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்