24 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் -மறியல்

24 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் -மறியல்

ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கைது.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், உணவு, மருந்துகள், இயந்திரங்கள், விவசாய இடுபொருட்கள் மீதான ஜிஎஸ்டி ஐ நீக்க வேண்டும்.
பெட்ரோலிய பொருட்கள், சமையல் எரிவாயு மீதான கலால் வரியை குறைக்க வேண்டும், தேசிய குறைந்தபட்ச ஊதியத்தை மாதம் ரூ. 26 ஆயிரமாக நிர்ணயம் செய்ய வேண்டும், அனைத்து வாகன ஓட்டுனர்களையும் பாதிக்கும் பாரதிய நியாய சன்ஹிட்டா (இந்திய தண்டனை சட்டம்) பிரிவு 106 (1), (2) திரும்பப் பெற வேண்டும், முறைசாரா தொழிலாளர்கள் ஒரே தொழிலை நீண்டகாலம் செய்ய முடியாமல் வேறொரு தொழிலுக்கு மாறுபவர்கள் என்பதால் தற்போது உறுப்பினராக இருக்கும் நலவாரியத்திலிருந்து மற்றொன்றுக்கு மாறிக்கொள்ள வழிமுறைகளை உருவாக்க வேண்டும், விவசாயிகளின் உரம், பூச்சிமருந்து, மோட்டாருக்கு பயன்படும் மின்சாரத்திற்கு மானியத்தை அதிகரித்து, விவசாயிகளின் விளைப்பொருட்களுக்கு செலவை காட்டிலும் கூடுதலாக 50 சதவிகிதம் விலை நிர்ணயம் செய்ய வேண்டும்,

100 நாள் திட்டத்தை 200 நாளாக்கி தினக்கூலி ரூ. 600 வழங்க வேண்டும். நகர்ப்புறத்திற்கும் இத்திட்டத்தை விரிவு படுத்த வேண்டும், மின்சார சட்டத் திருத்த மசோதா 2022 ஐ திரும்பப் பெற வேண்டும், முன்பணம்
செலுத்தி, மின்சாரத்தை உபயோகிக்கும் ஸ்மார்ட் மீட்டர்களை பொருத்துவதை கைவிட வேண்டும், பொதுத்துறை, அரசுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும், பழையை ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 24 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் இன்று
வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர்கள் தொமுச ஜோசப் மென்ஷன் குணசேகரன் எத்திராஜ் சி ஐ டி யு ரெங்கராஜன் ஏடிசி சுரேஷ் நடராஜன் சிவா ஐயன்தியூசி வெங்கட் நாராயணன் ஏஐசி டி ஞான தேசிகன் எஸ் எம் எஸ் ஜான்சன் ஆகியோர் தலைமை வகித்தனர் . சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக வந்து தெப்பக்குளம் தபால் நிலையம் அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 1000க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.அப்போது போலீசுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே லேசான மோதல் ,தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்