திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி சமூகப் பணித்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி.

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி

சமூகப் பணித்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி.

மாணவ மாணவிகள் பங்கேற்பு

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி சமூக பணித்துறை சார்பில் மாணவர்களுக்கான “அதிகாரம், தொழில் வழிகாட்டுதல் மற்றும் மது அடிமைத்தன ஒழிப்பு” என்னும் தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி,
கீரனூர், புனித ஆரோக்கிய அன்னை மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர், அருட்தந்தை, லியோ மேல்கியோர் பாபு தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக திருச்சி பல்நோக்கு சமூக பணி மைய செயலாளர், அருட்தந்தை சவரிமுத்து , ஆலோசகர் செல்வம், குடும்ப ஆலோசகர், செல்வி பரமேஸ்வரி , ஒருங்கிணைப்பாளர் சகாய ஜாக்கி ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியினை, பிஷப் ஹீபர் கல்லூரி, சமூக பணித்துறை துணை பேராசிரியர் முனைவர் சாம்சன் வழிகாட்டுதலின் கீழ் முதலாமாண்டு மாணவன்
முகமது ரியாஸ் ஏற்பாடு
செய்திருந்தார். நிகழ்ச்சியில் அப்பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்