ஸ்ரீரங்கம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் மாபெரும் இரத்ததான முகாமை பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு நெறியாளர் அவர்கள் துவக்கி வைத்தார்.

திருச்சி ஸ்ரீரங்கம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் மாபெரும் இரத்ததான முகாமை பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு நெறியாளர் அவர்கள் துவக்கி வைத்தார்.

பாரதிதாசன் பல்கலைக்கழக  துணைவேந்தர் பேராசிரியர் செல்வம் அவர்களின்  வழிகாட்டுதல்படி, பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டலம், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் திருச்சி மாவட்ட கிளை மற்றும் ஸ்ரீரங்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் இன்று (15.02.2023) ஸ்ரீரங்கம் அரசு கலை கல்லூரியில் நடைபெற்றது.
இந்த இரத்ததான முகாமை பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு நெறியாளர் பேராசிரியர் சீனிவாசராகவன் அவர்கள் தலைமையேற்று துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் முனைவர். வெற்றிவேல், ஸ்ரீரங்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர். லலிதா, இந்திரா கணேசன் கல்வி நிறுவனங்களின் செயலாளரும் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் திருச்சி மாவட்ட கிளையின் தலைவருமான இன்ஜினியர் ராஜசேகர், யூத் ரெட் கிராஸ் திருச்சி மாவட்ட அமைப்பாளரும் மற்றும் தந்தை பெரியார் அரசு கல்லூரியின் பேராசிரியருமான முனைவர். குணசேகரன், திருச்சி மாவட்ட ரத்த வங்கி அலுவலர் மருத்துவர் அனிதா, திருச்சி ரத்த வங்கி ஆட்டுநர் பாலச்சந்தர், ஸ்ரீரங்கம் அரசு கலைக் கல்லூரியின் யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலர் மகேஸ்வரி மற்றும் கல்லூரியின் பேராசிரியர்கள் முன்னிலை வகித்தனர்.

இந்த மாபெரும் இரத்ததான முகாமில் ஸ்ரீரங்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் யூத் ரெட் கிராஸ் தன்னார்வர்கள் ஆகிய 50 மாணவ மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் இரத்ததானம் செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்