நடிகர் விஷாலை தொடர்ந்து நடிகர் விஷ்ணு விஷாலும் கொந்தளிப்பு.
நடிகர் விஷாலை தொடர்ந்து நடிகர் விஷ்ணு விஷாலும் கொந்தளிப்பு.

எதற்காக வரி கட்டுகிறோம் என கேட்க வைத்து விடாதீர்கள். வந்து உதவுங்கள். என்று நடிகர் விஷால். ஆட்சியாளர்களுக்கு எதிராக x வலைதளத்தில் வீடியோ பதிவிட்டு பரபரப்பை உண்டு பண்ணிய வேளையில்,

தற்போது நடிகர் விஷ்ணு விஷாலும் கொதித்து போய் x வலை தளத்தில் பதிவிட்டுள்ளார். அதாவது நான்

காரப்பாக்கத்தில் வசிக்கிறேன். இங்கே வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக உயர்ந்து வருகிறது. நான் உதவிக்கு அழைத்தேன். யாரும் வரவில்லை. இங்கு மின்சாரம் இல்லை. வைஃபை இல்லை. தொலைபேசி சிக்னல் இல்லை. அதுவும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மொட்டை மாடியில்தான் சிக்னல் கிடைக்கிறது. எனக்கும் மட்டும் அல்ல இங்கே உள்ள பலருக்கும் ஏதாவது உதவி கிடைக்கும் என்று நம்பி கொண்டிருக்கிறோம். அதேபோல் சென்னை முழுவதும் உள்ள மக்களின் நிலமைகளை என்னால் உணர முடிகிறது என்று தெரிவித்துள்ளார்.