திருச்சி மதுரை ரோட்டில் செல்போன் திருட்டு ஒருவர் கைது.

திருச்சி மதுரை ரோட்டில் செல்போன் திருட்டு ஒருவர் கைது.

திருச்சி மதுரை ரோட்டில் நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியில் செல்போன் கடை வைத்து நடத்தி வருபவர் அபுதாகிர் (வயது 31). இவர் நேற்று முன்தினம் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.

மறுநாள் காலை செல்போன் கடைக்கு சென்று பார்த்த போது கடையில் பூட்டு உடைக்கப்பட்டு பொருட்கள் திருட்டு போய் இருப்பது கண்டு அதிர்ச்சிடைந்தார். இந்த திருட்டு குறித்து கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்போன், பொருட்களை திருடி சென்ற நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியை சேர்ந்த மற்றொரு அபுதாஹீர் (வயது 22) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்