கள்ள காதலுக்காக பெற்ற மகளை கொன்ற தாய். இது மதுரை சோகம்.
கள்ள காதலுக்காக பெற்ற மகளை கொன்ற தாய். இது மதுரை சோகம்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள உலகநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் சமய முத்து – மலர் செல்வி தம்பதியினர். இவர்களுக்கு 7 வயதில் ஒரு சிறுமியும் ஐந்து வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
சமய முத்து துபாயில் கட்டிட வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் சமயமுத்துவின் இளைய மகள் மர்மமான முறையில் மாயமாகியுள்ளார் .இதனால் சிறுமியை பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. சிறுமியின் தாய் மலர் செல்வியும் தேடியிருக்கிறார். இது தொடர்பாக காவல் நிலையத்தில் மலர் செல்வி தன்னுடைய இளைய மக்களை காணவில்லை என்று புகார் அளித்துள்ளார்.
இது குறித்து காவல்துறையினர் மலர் செவ்வியிடம் விசாரணை நடத்தியதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால் சந்தேகம் அடைந்த போலிசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் தன்னுடைய மகளை கொன்று விட்டதாக அதிர்ச்சி தகவலை கூறி இருக்கிறார் தாய் மலர் செல்வி. அதாவது இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.
அப்படி ஒருவரிடம் தனிமையில் இருந்ததை சிறுமி பார்த்துள்ளார். இதனால் சிறுமி வெளியே சொல்லிவிடுவாள் என்று கருதி தன்னுடைய மகளை அங்குள்ள கிணற்றில் வீசி கொலை செய்ததாகவும் இதற்கு கள்ளக்காதலன் உடந்தைடயாக இருந்ததாகவும் போலிசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது,.
மேலும் கள்ள காதலர்களான பாஸ்கர் மற்றும் தர்மராஜ் ஆகிய இருவரிடமும் நடத்திய விசாரணையில், மலர்விழிக்கு தங்களை போல் பலருடன் தொடர்பு இருப்பதாகவும், இந்த கொலைக்கும், தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்றனர். தான் மகளை கொலை செய்தது குறித்து யாருக்கும் தெரியாது என மலர்விழியும் கூறியுள்ளார். இதையடுத்து மலர்விழியை கொலை வழக்கில் கைது செய்த போலீசார், மேலும் யார், யாருடன் அவருக்கு தொடர்பு இருந்தது? குழந்தை மரணத்தில் வேறு யாருக்கும் சம்பந்தம் உள்ளதா என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.