மதுரை மாவட்டம் கருமாத்தூரில் வேன் மோதியதில் குழந்தை உட்பட 3 பேர் உயிரிழப்பு.
மதுரை மாவட்டம் கருமாத்தூரில் வேன் மோதியதில் குழந்தை உட்பட 3 பேர் உயிரிழப்பு.
மதுரை: கருமாத்தூரில் இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்தனர். மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகேயுள்ள கருமாத்தூரைச் சேர்ந்தவர் ஓட்டுநர் ராஜகுரு (27). இவரது அண்ணன் மகள் பிரமிளா (6). இவருக்கு நேற்று முன்தினம் இரவில் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து, பிரமிளா யை இருசக்கர வாகனத்தில் ராஜகுரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். உதவிக்காக பக்கத்து வீட்டைச் சேர்ந்த சங்கீதாவும் (28) உடன் சென்றார்.
மதுரை – தேனி பிரதான சாலையில் கருமாத்தூர் – கோவிலாங்குளம் விலக்கு அருகே வளைவில் திரும்பிய வேன் ஒன்று, எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 3 பேரும் படுகாயமடைந்தனர்.
அருகிலிருந்தவர்கள் அவர்களை மீட்டு, மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். செல்லும் வழியிலேயே ராஜகுரு உயிரிழந்தார்.
மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பிரமிளா, சங்கீதா ஆகியோர் உயிரிழந்தனர். விபத்து தொடர்பாக செக்கானூரணி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, வேன் ஓட்டுநர் குறவக்குடி பாண்டி (43) என்பவரைத் தேடி வருகின்றனர்