திருச்சி விமான நிலையத்தில் 296 கிராம் தங்கம் பறிமுதல்.

திருச்சி விமான நிலையத்தில் 296 கிராம் தங்கம் பறிமுதல்.

சிங்கப்பூரிலிருந்து புதன்கிழமை திருச்சி வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் சுங்கத்துறை வான் நுண்ணறிவுப் பிரிவினர் வழக்கமான சோதனைகளுக்கு உள்ளாக்கினர். இதில் பயணி ஒருவர் மின்சாதன உதிரி பாகத்துக்குள் மறைத்து உருளை வடிவிலான 179 கிராம் தங்கத்தை கொண்டு வந்திருந்தார். அதன் மதிப்பு ரூ. 13.88 லட்சம்.

அதேபோல் இண்டிகோ விமானத்தில் வந்த பயணியொருவர் 117 கிராம் தங்க கட்டிகளை கொண்டு வந்தது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு ரூ.9.07 லட்சமாகும். அந்த வகையில் மொத்தம் 296 கிராம் எடையிலான ரூ. 22.95 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்